தூத்துக்குடியில் பைக் விபத்தில் ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ. பலி: ஒருவர் காயம்

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. ஒருவர் மற்றொரு வி.ஏ.ஓ. உடன் தளவாய்புரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.;

Update:2025-11-10 03:13 IST

தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 62), கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தூத்துக்குடி பி&டி காலனி 8வது தெருவை சேர்ந்தவர் கிழக்கத்தியான் மகன் பேச்சிராஜா(55). இவர் தளவாய்புரம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று தளவாய்புரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பேச்சிராஜா பைக்கை ஓட்ட, ராமகிருஷ்ணன் பின்னால் அமர்ந்திருந்தார். தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கோரம்பள்ளம் ஜங்ஷன் அருகே வரும்போது, மேம்பாலம் பணிகள் நடந்து வருவதால் சர்வீஸ் சாலையில் திரும்பும் போது திடீரென பைக் நிலைத்தடுமாறி அருகில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதனை செய்த டாக்டர், ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பேச்சிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்