முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்து விபத்து

சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில் டயர் வெடித்துள்ளது.;

Update:2026-01-07 16:21 IST

திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடியில் 111 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் ஆஸ்டின்பட்டி பகுதிக்கு அருகே சென்றபோது முதல்-அமைச்சர் பயணம் செய்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில் டயர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் முதல்-அமைச்சருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. உடனடியாக முதல்வர் வேறொரு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்