தமிழகத்தில் நிலவும் யூரியா உரத்தட்டுப்பாட்டை போக்கவேண்டும் - டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-08 20:13 IST

சென்னை,

அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தமிழகத்தில் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் வளர்ச்சிக்கு அவசியமான யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் யூரியா உரம் போதுமான அளவில் இல்லை. இதனால் தனியார் உரக்கடைகளை நாடிச்செல்லும் விவசாயிகளிடம், யூரியாவுடன் மற்ற உரங்களையும் சேர்த்து வாங்குமாறு கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தேவையான உரங்களை போதுமான அளவிற்கு முன்கூட்டியே இருப்பு வைக்க தவறியதே தற்போதைய உரத்தட்டுப்பாட்டிற்கு காரணம் என பாதிப்புக்குள்ளாயிருக்கும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாதது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் உடனடியாக வினியோகிக்கப்படுவதையும், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்