சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா - ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி
திருத்தம் செய்யப்பட்ட மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.;
சென்னை,
தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் 4 முறை பல்வேறு கேள்விகளை எழுப்பி மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கவர்னர் அந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்காமல், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.