தேனி: பஸ் - மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - டிரைவர் உடல் நசுங்கி பலி

எதிர்பாராதவிதமாக பஸ்சும் மினி லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.;

Update:2025-04-20 22:56 IST

மதுரையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு போடி நோக்கி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் எதிரே தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு சிமண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சும் மினி லாரியும் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மினி லாரியின் முன்பக்கம் முற்றிலும் சேதமடைந்தது. மினி லாரியை ஓட்டிவந்த டிரைவர் இந்த விபத்தில் உடல் நசுங்கி உள்ளே சிக்கிக்கொண்டார்.

இதனையடுத்து விபத்தில் சிக்கிய முத்துலிங்கம் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் தனியார் பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து ஆண்ப்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்