எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை என். டி. ஏ. கூட்டணியில் சேர வாய்ப்பு இல்லை - டிடிவி.தினகரன்

அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்;

Update:2025-12-05 14:37 IST

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,

அ.ம.மு.க.வை ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான் இயக்குகிறார்கள்.தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அ.ம.மு.க. அந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்பே இல்லை .அம்மாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் நிலைப்பாடு.

மத்திய மந்திரி அமித்ஷாவை நான் சந்திக்க மாட்டேன். அவரும் என்னை அழைக்கமாட்டார். இந்த தேர்தலில் துரோகம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் அ.ம.மு.க. உறுதியாக இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்