கவர்னருக்கு தமிழக அரசு தொடர்ந்து அவமரியாதை செய்கிறது - ஜி.கே. வாசன் கண்டனம்

தமிழக கவர்னர் ஏற்கனவே கோரிக்கை வைத்த பிறகும் கூட தேசிய கீதத்தை பாடாதது மக்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறது என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.;

Update:2026-01-20 13:48 IST

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. வெளியிட்டு உள்ள செய்தியில், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னரை இன்று பேச விடாமல் இடையூறு ஏற்படுத்தி, அவருக்கு அவமரியாதை ஏற்படுத்தியது ஏற்புடையதல்ல.

தேசிய கீதம் பாட வேண்டும் என்பது பொதுவான மரபு.  அதனை தொடர்ந்து கடைபிடிக்க சட்டமன்றத்தில் தமிழக கவர்னர் ஏற்கனவே கோரிக்கை வைத்த பிறகும் கூட தேசிய கீதத்தை பாடாதது மக்கள் விருப்பத்திற்கு மாறாக இருக்கிறது.

தொடர்ந்து தமிழக அரசு, கவர்னருக்கு அவமரியாதை செய்வது கண்டனத்துக்குரியது. இது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிஸ் (மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்