திருவாரூர்: மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்த பெண் கைது

மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு நந்தினி அங்கிருந்து தப்பியுள்ளார்.;

Update:2025-04-20 05:02 IST

திருவாரூர்.

மன்னார்குடி மாடர்ன் நகரில் வசித்து வருபவர் அம்சா (வயது 79). இவரது மகன் திருச்சியில் வசித்து வருகிறார். கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வரும் மூதாட்டிக்கு மருந்து மாத்திரைகள் தனியார் மருந்து கடை மூலம் வாரந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல மருந்து கடை ஊழியரான நந்தினி (24) என்பவர் மருந்துகளை வழங்க நேற்று மூதாட்டி அம்சா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு நந்தினி அங்கிருந்து தப்பியுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூதாட்டியை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தனியார் மருந்து கடை ஊழியர் நந்தினியை கைது செய்தனர். விசாரணையில் மூதாட்டியிடம் இருந்து பறித்து சென்ற தங்க சங்கிலியை நந்தினி அடகு கடையில் அடகு வைத்தது தெரிய வந்தது. இதைடுத்து போலீசார் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்