தூத்துக்குடி: தாய் திட்டியதால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தாய் திட்டியதால் மனமுடைந்த 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-05-03 14:16 IST

கோப்புப்படம் 

தூத்துக்குடி பூபாலராயர்புரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் ஜோ விசுவா (14 வயது). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வீட்டில் இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜோ விசுவாவுக்கும், அவனுடைய அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. எனவே ஜோ விசுவாவை அவனது தாய் கண்டித்து திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜோ விசுவா வீட்டின் பின்பக்க அறையில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் இறந்த ஜோ விசுவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் தாயார் திட்டியதால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்