புலிகள் கணக்கெடுப்பு பணி நிறைவு: மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளுக்கு செல்ல அனுமதி

6 நாள்கள் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றன.;

Update:2026-01-24 13:28 IST

கோப்புப்படம் 

நெல்லை,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில் கடந்த 19-ந்தேதி முதல் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகள், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 6 நாள்கள் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் இன்று காலையுடன் நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் பாபநாசம், மணிமுத்தாறு சோதனைச் சாவடிகள் திறக்கப்பட்டு மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகள், சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்