பிற்பகல் 1 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
பிற்பகல் 1 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி
சென்னை,
செங்கல்பட்டு,
திருவள்ளூர்,
ராணிப்பேட்டை,
காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை,
விழுப்புரம்,
கடலூர்,
அரியலூர்,
பெரம்பலூர்,
நீலகிரி,
கோவை,
கரூர்,
திருப்பூர்,
தேனி,
தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை கவின் கொலை வழக்கு: சிபிசிஐடி போலீசார் விசாரணை
நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானத்தில் தீ விபத்து
விமானத்தை தரையிறக்க முயன்ற போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. பிறகு, சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி, பிறகு 2வது முயற்சியில் பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இதனால், விமானத்தில் இருந்த உள்ளடங்கிய பயணிகள் பீதியடைந்தனர். நேற்று இந்த நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சரக்கு விமானத்தில் தீ பிடித்த சம்பவம் பயணிகள் மத்தியில் அடுத்தடுத்து அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
நடிகர் அபிநய் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவிய தனுஷ்
எலும்பும், தோலுமாய் இருக்கும் நடிக்கும் அபிநய்க்கு திரையிலகினர் உதவ முன்வர வேண்டும் என்று ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் தனுஷ் அபிநய்க்கு மருத்துவ செலவுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.
இந்த வார விசேஷங்கள்: 12-8-2025 முதல் 18-8-2025 வரை
12-ந் தேதி (செவ்வாய்)
* சங்கடஹர சதுர்த்தி.
* வடமதுரை சௌந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.
* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் - உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் விடியலுக்காக, இளைஞர்களால் உருவான பேரியக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். இந்திய வரலாற்றிலேயே இளைஞர் அணியை உருவாக்கிய முதல் அரசியல் இயக்கமும் நம் கழகம்தான். இளைஞர்களால் உருவாகி, இளைஞர்களோடு பயணித்து, எதிர்கால இளம் சமுதாயம் கல்வி - வேலைவாய்ப்பு -பொருளாதார சமநிலை பெற தொடர்ந்து போராடும் பேரியக்கத்தின், இளைஞர் அணிச் செயலாளர் என்ற முறையில், தமிழ்நாட்டின் நாளைய தலைவர்கள் அனைவருக்கும் #InternationalYouthDay வாழ்த்துகள்!
இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
எதிர்காலம் நமக்கானது. உயர்ந்த கனவுகளோடு, அயராது உழைப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையிடம் மிதிவாங்கியவருக்கு ரூ.25,000 அபராதம்
கர்நாடகா பந்திப்பூரில் காட்டு யானையிடம் செல்பி எடுக்க முயன்று மிதி வாங்கிய நபருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி யானை தாக்கி காயமடைந்த நபரை கண்டறிந்து கர்நாடக வனத்துறை ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
காட்டு யானையை தொந்தரவு செய்த நபர், தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,26,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் - சென்னை மாநகராட்சி வேண்டுகோள்
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் பொதுநலன் கருதியும், தங்களது பணிப்பாதுகாப்பு குறித்த உண்மை நிலையினை புரிந்து கொண்டும், உயர்நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்பு மற்றும் தொழில்தீர்ப்பாயத்தின் முடிவுகளை எதிர்நோக்கி, உடனடியாக வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீனா மீதான வரி விதிப்பு மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தம்
சீனாவுக்கு எதிரான வரி விதிப்பு நிறுத்தம் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போடு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.