இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025

Update:2025-07-15 09:28 IST
Live Updates - Page 6
2025-07-15 04:27 GMT

மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் பலி


மாரத்தான் வீரர் பவுஜா சிங் மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


2025-07-15 04:26 GMT

இது மிகவும் சிறப்பான வெற்றி - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்


இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.


2025-07-15 04:24 GMT

அரசு சேவைகள் வீடு தேடி வர 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்


பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் புதிய திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.


2025-07-15 04:22 GMT

சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.9,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

2025-07-15 04:00 GMT

இன்றைய ராசிபலன் - 15.07.2025

கடகம்

உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

2025-07-15 03:58 GMT

டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா - இன்று மாலை தரையிறங்குகிறார்

இந்திய நேரப்படி இன்று பகல் 2.53 மணியளவில் டிராகன் விண்கலத்தில் உள்ள 2 சிறிய 'டுரோக்' பாராசூட்டுகள் பூமிக்கு மேல் சுமார் 5.5 கிலோ மீட்டர் உயரத்தில் கலிபோர்னியா கடலின் மேல் பகுதியில் திறக்கும். இது விண்கலத்தை 156 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 53 கிலோ மீட்டர் வேகமாகக் குறைக்கும்.

பின்னர், 4 பெரிய பாராசூட்டுகள் விரிந்து, டிராகனின் வேகத்தை 7 கிலோ மீட்டராக குறையும். பகல் 3 மணிக்கு டிராகன் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்