இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-02-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
திருச்சியில் பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
*இல்லம் தேடி கல்வி' திட்டத்தை சிறப்பாக நடத்திக் காட்டியவர் அமைச்சர் அன்பில் மகேஷ்.
*இவர் தலைமையில் பள்ளி கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரை பாராட்ட இந்த ஒரு நிகழ்ச்சி போதாது.
*இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
*நாட்டுப் பற்று என்பது நிலத்தின் மீது வரும் பற்றல்ல. மக்கள் மீது வரும் பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று.
இவ்வாறு அவர் கூறினார்.
அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறுவதால் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலைக்கு செல்ல அனுமதியில்லை
போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்
கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும்-போக்குவரத்து காவல்துறை
தமிழக வெற்றிக் கழகத்தில் 5ம் கட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 19 பொறுப்பாளர்கள் நியமனம்
ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
உரிய அனுமதியின்றி பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
மலேசியாவில் நடைபெற்ற 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் வெளிநாட்டு குழுவினர் கலந்துகொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.