2025-02-02 07:21 GMT
குஜராத்தின் துவாரகா நோக்கி பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, இன்று அதிகாலையில் மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அங்கிருந்து பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா சென்றுகொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
2025-02-02 07:14 GMT
வசந்த பஞ்சமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் இந்தப் பண்டிகை, ஞானத்தின் சின்னமான சரஸ்வதி தேவியை வழிபடும் பண்டிகை என்றும் அவர் கூறி உள்ளார்.
2025-02-02 07:08 GMT
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட பட்ஜெட் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.