இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

Update:2025-04-11 09:04 IST
Live Updates - Page 3
2025-04-11 04:49 GMT

சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பது உறுதியாகியுள்ளது

2025-04-11 04:30 GMT

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025-04-11 04:23 GMT

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” எனப்பதிவிட்டுள்ளார்.



2025-04-11 03:36 GMT

  •  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது
  • கோயம்பேடு மலர் சந்தையில் கிலோ ரூ.400-க்கு விற்பனையான மல்லி பூ இன்று ரூ.600-க்கு விற்பனையாகிறது

2025-04-11 03:35 GMT

  • ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கரூர் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று மாற்றம்
  • பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு ரயில் இன்று கரூர் வரை மட்டும் இயக்கம்
  • ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும் - தெற்கு ரயில்வே

Tags:    

மேலும் செய்திகள்