இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-04-11 09:04 IST


Live Updates
2025-04-11 14:28 GMT

திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டு முடியும் வரை அவகாசம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கோரிக்கையை ஏற்று மே மாதம் இடிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

2025-04-11 14:27 GMT

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியான ஒரே நாளில், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.30.9 கோடி வசூலை குவித்துள்ளது.

2025-04-11 14:26 GMT

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.

2025-04-11 13:39 GMT

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக - பாஜக கூட்டணி இயல்பானது அல்ல. ஜெயலலிதாவின் ஆன்மா ஈபிஎஸ்-ஐ மன்னிக்குமா? பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

2025-04-11 12:55 GMT

சென்னை கிண்டியில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டார். மத்திய மந்திரி அமித்ஷா. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், ஈபிஎஸ் வீட்டில் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.

2025-04-11 12:13 GMT

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைக்கிறது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

2025-04-11 11:23 GMT

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ள நிலையில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு நடைபெறுகிறது. 

2025-04-11 11:23 GMT

அண்ணாமலை தேசிய பொறுப்புக்கு செல்கிறார். பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணமலையின் திறமை பயன்படுத்தப்படும் மத்திய உள்துறை மந்திரி கூறியுள்ளார்.

2025-04-11 10:20 GMT

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் பெயர் பலகையில் அண்ணாமலையின் பெயர் அழிக்கப்பட்டது.

2025-04-11 10:19 GMT

அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 125 சதவீதமாக உயர்த்தி சீனா பதிலடி கொடுத்துள்ளது. வர்த்தக போர் எல்லை இல்லாதது, இதே நிலை நீடித்தால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்