இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-11-2025

Update:2025-11-13 09:09 IST
Live Updates - Page 7
2025-11-13 03:42 GMT

ஆட்சியை பிடிப்பது யார்..? - பீகாரில் நாளை வாக்கு எண்ணிக்கை 


பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில். ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து நாளை பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.

2025-11-13 03:40 GMT

ராசிபலன் (13-11-2025): புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்யம் உண்டு..! 


 கடகம்

வேலைப்பளு அதிகரிக்கும். பயணங்களில் லாபம் உண்டு. வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். சுப காரியங்கள் நடைபெறும். சமூகத்தில் மதிப்பு உயரும். தம்பதிகளிடையே அன்பு பெருகும். தங்கள் தோழிகளிடம் பெண்கள் மனம்விட்டு பேச நேரம் கிடைக்கும். உடல்நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

Tags:    

மேலும் செய்திகள்