சென்னையில் நடைபெற உள்ள சிஎஸ்கே - பெங்களூரு போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
விற்பனை தொடங்கிய 20 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
20 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்க 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முயற்சித்து ஏமாற்றம்
- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி
- பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்
- கொத்தகோட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார்
- திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து நிற்காததால் அதிர்ச்சி
- பேருந்தை பின் தொடர்ந்து ஓடிய மாணவி அரசு பேருந்தில் ஏறிச் சென்ற வீடியோ வைரல்
- - போக்குவரத்து துறை
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
- தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி செல்கிறார் ஈபிஎஸ்
- டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல்
- டெல்லியில் முக்கிய தலைவர்களையும் ஈபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
சென்னையில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் 7 செயின் பறிப்பு சம்பவம்
இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சிதிருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு; 15 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் உயர்கிறது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாத ஊதியம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாகவும், தினசரி படி ரூ.2,000ல் இருந்து ரூ.2,500-ஆகவும், முன்னாள் எம்.பி.களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000ல் இருந்து ரூ.31,000 ஆகவும் உயர்கிறது. இந்த ஊதிய உயர்வு 2023 ஏப்ரல் 1 முன்தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.