இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 31-05-2025

Update:2025-05-31 09:23 IST
Live Updates - Page 6
2025-05-31 03:56 GMT

திருவாடனை அருகே பெரியகீரமங்கலம் ஊரணியில் குளிக்க சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

2025-05-31 03:56 GMT

வந்தே பாரத் ரெயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவை என்ற ஆப்ஷனை எடுத்துள்ளார்கள் (IRCTS) ஐ.ஆர்.சி.டி.எஸ்

2025-05-31 03:55 GMT

மூத்த நிர்வாகிகளுடன் ராமதாஸ் தொடர் ஆலோசனை

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் மூத்த நிர்வாகிகளை இன்றும் சந்திக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கெனவே தீரன் உள்ளிட்டவர்களுடன் ராமதாஸ் ஆலோசனை செய்த நிலையில் இன்றும் பலரை சந்திக்கிறார்.

2025-05-31 03:54 GMT

கேரளாவுக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு

மழை முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு கேரளாவுக்கு சென்றது பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் பேரிடம் மீட்புக்குழு சென்றுள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 4 குழுக்கள் நவீன உபகரணங்களுடன் கேரளாவில் முகாமிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்