தாயின் கள்ளக்காதலனால் 16-வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

ஜெய்சங்கர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார்.;

Update:2025-06-22 11:08 IST

அரியலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சி.அரசூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜின் மகன் ஜெய்சங்கர் (வயது 34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெய்சங்கர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்கு வந்துள்ளார்.

அப்போது திருமணமாகி கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். ஜெய்சங்கர் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய நிலையில், அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ஜெய்சங்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள், ஆவணத்திற்காக பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்தபோது 18 வயது நிரம்பாத சிறுமி என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்