வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69.72 அடியை எட்டியுள்ளது.;

Update:2025-08-08 23:00 IST

தேனி,

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 71 அடி கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69.72 அடியை எட்டியுள்ளது.

அணை மதகு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை வேகமாக நிரம்பி வருவதால் 3ஆம் கட்ட வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்