கடலூரில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்
சாலையில் சென்ற காரை முந்திச்செல்ல முயன்றபோது வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வேனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், முன்னாள் சென்ற காரை வேன் டிரைவர் முந்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.