தூத்துக்குடியில் வேன் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர்.;

Update:2026-01-24 21:18 IST

புதுக்கோட்டை மாவட்டம், மேலமஞ்சிவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை அழகர் மகன் அபிஷேக் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலையில் தூத்துக்குடி புதிய துறைமுகம், மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் ஆலை அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் வந்த 19 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலு மகன் சிவஞானம்(57) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்