ஓசூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை
கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.26 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.