10 நிமிடம் பேசுவதற்கே விஜய் சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ணணும்; சீமான் கிண்டல்

விஜய் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்;

Update:2025-09-12 15:53 IST

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார். இதன்படி நாளை தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார். திருச்சி சத்திரம் பகுதியில் தொடங்கி அரியலூர், குன்னம் பெரம்பலூர் பகுதிகளிலும் பிரசார பயணத்தை விஜய் மேற்கொள்ள உள்ளார். 'தளபதி 2026 அரசியல் பிரசார பயணம்' என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது,

திருச்சியில் விஜய் பேசுவதற்கு 10 நிமிடம் தான் கேட்டுள்ளார்கள் . விஜய் பேசுவதற்கு அரசு கூடுதலாக 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும். பேச்சை மனப்பாடம் செய்வதற்காகவே சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் சுற்றுப்பயணம் செய்கிறார்.

வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். நீ வேடிக்கை காட்ட வருகிறாய். நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமாக இருக்கிறாய். கோட்பாடு அளவில் தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் அண்ணன், தம்பி இல்லை என்கிறாமா, சண்டை போடுகிறாமா? . என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்