பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி

சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மர்மநபர் கூறியுள்ளார்.;

Update:2025-12-17 17:24 IST

கோப்புப்படம் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெலாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணை, அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். தினமும் பங்குச்சந்தை நிலவரங்களையும், எந்த பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் அந்த வாட்ஸ்-அப் குழுவில் அனுப்பியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய அப்பெண், தனது வங்கி கணக்கில் இருந்தும் மற்றும் உறவினர், நண்பர் ஆகியோரின் வங்கி கணக்குகளில் இருந்தும் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு 5 தவணைகளாக 19 லட்சத்து 84,775 ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தைப்பெற்ற அந்த நபர், அப்பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்