அறையில் உட்கார்ந்து அரசியல் செய்யும் விஜய், களத்திற்கு வர வேண்டும் - செல்லூர் ராஜு
தமிழ்நாட்டில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி என செல்லூர் ராஜு கூறினார்.;
மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள். விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் தவெகவுக்கு வாக்கு இருப்பதாக விஜய் கூறுவது வாயில் வடை சுடுவதை போன்றது. குடும்பத்தில் ஒரு ஓட்டு உள்ளது என எத்தனை வீடுகளில் விஜய் கணக்கெடுத்தார்? புதுமுகம் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என நினைத்தேன். ஆனால் விஜய் எங்கள் காதை கடிக்கிறார். ஆதவ் அர்ஜுனாவை வைத்துக் கொண்டு ஊழல் பற்றி விஜய் பேசுவது வேடிக்கையான விஷயம். தமிழ்நாட்டில் அதிமுக-திமுக இடையேதான் போட்டி.”
இவ்வாறு அவர் பேசினார்.