தம்பி விஜய்க்கு அனுபவம் பத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்

திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதல்-அமைச்சர் ஆவது கடினம் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-26 11:41 IST

சென்னை,

சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது; தனித்து விடப்பட்டதால் அதிமுக சரணடைந்ததாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஒரு சின்ன தம்பி பேசுவதாக தான் நான் பார்க்கிறேன். விஜய் பேசுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்துபோய்விடாது. நாங்கள் வெற்றி பெறுவோம்.

திமுக மற்றும் என்.டி.ஏ. இடையேதான் போட்டி. விஜய் ஜீரோ மாதிரி; ஜீரோ தனியாக இருந்தால் மதிப்பில்லை; இன்னொரு எண்ணுடன் இருந்தால்தான் வேல்யூ. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விஜய் நிம்மதியாக அரசியல் செய்யலாம். ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை நினைவில் வைக்க வேண்டும்.

திரைத்துறையில் இருந்து வந்த உடனே முதல்-அமைச்சர் ஆவது கடினம். அரசியலில் அனுபவம் இல்லாததால் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை; அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுகிறதோ அந்த கூட்டணிக்கு விஜய் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்