தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் சாவு
தூத்துக்குடி, மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.;
தூத்துக்குடி, மீளவிட்டான், சில்வர்புரத்தைச் சேர்ந்த காசி மனைவி சாந்தா (வயது 56). இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தினசரி அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்ந நிலையில் கடந்த 16ம்தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது மகன் செல்வக்குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.