கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கிக்கொண்ட பெண்
திடீரென மின்தடை ஏற்பட்டதால் லிப்ட் பாதியிலேயே நின்றது.;
கோப்புப்படம்
விருதுநகர்,
ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷோபியா (வயது 30). இவர் புதிய கலெக்டர் அலுவலக மாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் தட்டச்சர் பணிக்கான நேர்காணலுக்காக வந்திருந்தார். இவர் லிப்டில் ஏறி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதனால் லிப்ட் பாதியிலேயே நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபியா உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு மீட்பு படையினர் வந்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பாகவே மின்தடை சரியானதால் லிப்ட் இயங்கியது.
இதனால் அவர் லிப்டில் இருந்து வெளியே வந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது.