திருப்பத்தூர்: கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் காவல் நிலையம் முன் இளம்பெண் தர்ணா
தியாகராஜனை தந்தை யுவராஜ் வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.;
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்த அகிலா (27). இவர் டெக்னீசியன் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜோலார்பேட்டை இடையம்பட்டி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (42) என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
தியாகராஜனுக்கு இரண்டு அக்காள் உள்ள நிலையில் அவர்களுக்கு திருமணம் ஆகாததால் இவர்களின் திருமணத்திற்கு தந்தை யுவராஜ் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தியாகராஜனை தந்தை யுவராஜ் வீட்டை விட்டு அனுப்பியுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் இட்லிகடை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தியாகராஜனுக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் தன் காதல் மனைவி அகிலாவை விட்டு தந்தை யுவராஜ் உடன் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அகிலாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது தன் குழந்தையை வைத்துகொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், தன்னை தன் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஜோலார்பேட்டை காவல் நிலையம் முன்பாக திடீரென அகிலா தன் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அகிலாவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது