தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேருக்கு பத்ம விருது: அன்புமணி வாழ்த்து
பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது.;
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மருத்துவர் எச்.வி ஹாண்டே உள்ளிட்ட 14 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 131 பேருக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன் ஆகியோருக்கு மறைவுக்குப் பிறகு முறையே பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டிருப்பது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மரியாதை ஆகும். பத்மபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள நடிகர் மம்முட்டி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கே.ஆர். பழனிச்சாமி, சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மருத்துவர் எச்.வி . ஹாண்டே, மருத்துவர் நடேசன், கே.இராமசாமி, ஐஐடி இயக்குனர் காமகோடி, எழுத்தாளர் சிவசங்கரி, இசைக் கலைஞர்கள் காயத்ரி மற்றும் ரஞ்சனி சகோதரிகள், குடிமைப்பணி அதிகாரி விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், கிருஷ்ணன் (மறைவுக்குப் பிறகு), ராஜஸ்தபதி காளியப்பக் கவுண்டர், திருவாரூர் பக்தவச்சலம், புதுச்சேரியைச் சேர்ந்த சிலம்பாட்டக் கலைஞர் பழனிவேல் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.