பத்ம விருது: தேர்வானவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு‌ அதிமுக சார்பிலும், மக்களின் சார்பிலும் எடப்பாடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-25 21:27 IST

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

2026ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசின் விருதுப்பட்டியலில் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மற்றும் மருத்துவர் கள்ளிபட்டி ராமசாமி . பழனிச்சாமிக்கும்,

பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக சேவை ஆற்றிய டாக்டர் எச்.வி. ஹண்டே, கால்நடை ஆராய்ச்சியாளர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன், வேளாண் விஞ்ஞானி கே.ராமசாமி, வீழிநாதன் காமகோடி - ஐஐடி இயக்குநர் சென்னை, எழுத்தாளர் சிவசங்கரி, கர்நாடக இசைக் கலைஞர்கள் காயத்திரி பாலசுப்பிரமணியன், ரஞ்சனி பாலசுப்பிரமணியன்,

முன்னாள் இந்திய காவல் பணி உயர் அதிகாரி விஜயகுமார், ஓதுவார் திரு.திருத்தணி சுவாமிநாதன், ஆர்.கிருஷ்ணன், ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம் , நடிகர் மாதவன், புதுச்சேரி கே.பழனிவேல் ஆகியோரின்‌ பெயர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன், தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கும் இவ்விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு‌ அஇஅதிமுக சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்