தூத்துக்குடியில் வாளுடன் திரிந்த வாலிபர் கைது

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தரண்யா மற்றும் போலீசார் திருச்செந்தூர் ரோடு, சத்யாநகர் பாலம் அருகே பெரியசாமிநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர்.;

Update:2025-09-07 21:45 IST

தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தரண்யா மற்றும் போலீசார் திருச்செந்தூர் ரோடு, சத்யாநகர் பாலம் அருகே பெரியசாமிநகர் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் அவர் சத்யாநகரை சேர்ந்த கண்ணன் மகன் சீனு (வயது 25) என்பதும், அவர் 3 அடி நீளத்தில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சிப்காட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்காரரை தாக்குவதற்காக வாள் வைத்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்