இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.;

Update:2025-05-25 19:33 IST

சென்னை,

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரவு 10 மணி வரை 1 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தஞ்சாவூர், திருப்பூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தருமபுரி, மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்