தமிழகத்தில் 21ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;
நடப்பு ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகபடியான மழையை தரக்கூடிய பருவமழையாக உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.