சென்னையின் பல இடங்களில் லேசான மழை
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.;
சென்னை,
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. அதன்படி, அடையாறு, திருவான்மியூர், கிண்டி, பட்டினம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.