16 - 18 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.;

Update:2025-10-10 15:58 IST

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிக மழை பொழிவை கொடுக்கும். வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழை காலங்களில் வட மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்ப்பது வழக்கம்.இந்த நிலையில், வட கிழக்குப் பருவமழை வருகிற 16-18 ஆகிய தேதிகளில் தொடங்க சாத்தியம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தென்மேற்கு பருவமழை வருகிற 16-18-ந்தேதிகளில் இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதே நேரத்தில் வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு, வடகிழக்கு திசை காற்று வீசக்கூடிய நிலையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வருகிற 16-18 ந்தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்தியம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை கொட்டுகிறது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் விரைவில் ஏற்கனவே முன்எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்