நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.;

Update:2025-08-27 22:56 IST

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு -வடமேற்கு திசையில் ஒடிசா நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்