இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் இரவு 10 மணிவரை 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருச்சி, மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல், அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.