சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை
எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது;
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் , வடபழனி, நுங்கம், அண்ணாநகர், கோயம்பேடு, திருவொற்றியூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.