சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.;
தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 25ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அலுவலம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதியடைந்தனர். அதேவேளை, மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.