இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?
சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் வடக்கு திசையில் நகர்ந்துள்ளது. புயல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகம் - புதுவை கடலோரப்பகுதிகளில், கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்கால் கிழக்கு - வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதாரண்யத்திற்கு வடகிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இந்நிலையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.