தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.;
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி ராமநாதபுரம் தஞ்சாவூர் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்த்துள்ளது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர். மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் .