பரவலாக பெய்த மழை... தமிழகம் முழுவதும் குறைவாக பதிவான வெப்பநிலை

தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட இன்று 100 டிகிரி மற்றும் அதை தாண்டி வெப்பம் பதிவாகவில்லை.;

Update:2025-05-19 21:31 IST

சென்னை,

அக்னி நட்சத்திர காலங்களில் தமிழகம் முழுவதும் வெப்பநிலை இயல்பை விட அதிகரித்து காணப்படும். இந்த நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பநிலை சற்று குறைவாக பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில், இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், ஒரு இடத்தில் கூட 100 டிகிரி மற்றும் அதை தாண்டி வெப்பம் பதிவாகவில்லை.

தமிழகத்தின் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் விபரம் பின்வருமாறு;

1. பாளையங்கோட்டை - 98 டிகிரி பாரன்ஹீட்

2. ஈரோடு - 95 டிகிரி பாரன்ஹீட்

3. சென்னை - 94 டிகிரி பாரன்ஹீட்

4. மதுரை - 94 டிகிரி பாரன்ஹீட்

5. கரூர் - 93 டிகிரி பாரன்ஹீட்

6. திருச்சி 93 டிகிரி பாரன்ஹீட்

7. தூத்துக்குடி - 92 டிகிரி பாரன்ஹீட்

8. கோவை - 92 டிகிரி பாரன்ஹீட்

 

Tags:    

மேலும் செய்திகள்