தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான “ஆரஞ்சு அலர்ட்” - எப்போது தெரியுமா..?
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.;
கோப்புப்படம்
சென்னை,
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
இந்த சூழலில் தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் ஜன. 9, 10 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 9ம் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி
மிக கனமழை
09-01-2026: மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை
10-01-2026: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி
கனமழை:
09-01-2026: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம்
10-01-2026: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை
11-01-2026: வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு
மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09-01-2026
10-01-2026
11-01-2026