அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வணிக வளாகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அண்டோனியோ நகரில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் பணியாற்றிவந்த ஜோஷ் ஹெர்னண்டஸ் (வயது 21) என்ற இளைஞருக்கும் சக ஊழியர்களுக்கும் இடையே நேற்று முன் தினம் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஜோஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ஊழியர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வணிக வளாகத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வணிக வளாகத்திலேயே ஜோஷ் ஹெர்னண்டசும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.