துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட்ங்கள் குலுங்கியதால் மக்கள் பீதிஅடைந்தனர்.;

Update:2025-08-11 06:25 IST

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 என நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேற்கு துருக்கியில் 11 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 7.15 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்தனர். இஸ்தான்புல், இஸ்மிர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக என்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. பலிகேசிர் மாகாணத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்