அமெரிக்கா: விமான நிலையத்தில் வாகன விபத்து - 18 பயணிகள் படுகாயம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் டல்லாஸ் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது.;

Update:2025-11-12 01:51 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் டல்லாஸ் நகரில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து விமானம் நிறுத்தப்பட்டு உள்ள இடத்துக்கு பயணிகளை அழைத்து கொண்டு ஒரு வாகனம் புறப்பட்டது. அப்போது விமானம் அருகே உள்ள முனைய நுழைவு வாயிலில் அந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

உடனடியாக காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்