ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து;

Update:2025-07-16 21:23 IST

ரெய்க்யவிக்,

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஐஸ்லாந்து. இந்நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இதில் பல எரிமலைகள் செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையிலை, ஐஸ்லாந்தின் ரெய்க்ஜென்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை இன்று அதிகாலை வெடித்து சிதறியது. இதனால், எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி வருகிறது. இதன் காரணமாக எரிமலைக்கு அருகே உள்ள கிரிண்டவிக் நகரில் இருந்து சுற்றுலா பயணிகள் , பொதுமக்கள் என பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்